ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி கே சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் காலமானார். நள்ளிரவில் அவரது வீட்டுக்கு நேரில் சென்ற சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டில் கணவர் நடராஜனை இழந்த சசிகலாவின் குடும்பத்தில் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
