“எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு…” அதுபோலவே சரித்திரத்தில் விஜயும்…! இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பெருமிதம்…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2025

Spread the love

விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. அரசியலில் விஜய் பெரிய தாக்கத்தை உருவாக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டம் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது.

தற்போது வரை அதைப்பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனரும், விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, எம்.ஜி.ஆர் தனக்காக வாழவில்லை. அவரின் ஏழு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன்.  அவர் அரசியலுக்கு வந்த பிறகு தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அதன் பிறகு அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கண்ணுக்குத் தெரியவில்லை.

   

மறைந்தும் வாழ்கிற மனிதர்கள் அரிது. இன்று ஒருவர், அந்த ஒரு இடத்தை மனதில் வைத்துக்கொண்டு, வாழ்கிற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, தானும் தமிழ்நாட்டு சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய மகன் என்று நினைக்கும்போது ஒரு தகப்பனாக எனக்குப் பெருமையாக இருக்கிறது.”