ஐயோ பாவம்… கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து… அமைச்சரின் மகள் உட்பட 4 பேர் பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் உட்பட நான்கு பேர், ஜாம்ஷெட்பூரின் சோனாரி பகுதியில் உள்ள மரைன் டிரைவ் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் காரும் லாரியும் மோதி உயிரிழந்தனர்.

இந்த சோகமான விபத்து அதிகாலை 3 மணியளவில் தொமுஹானி பகுதிக்கு அருகில் நிகழ்ந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

https://twitter.com/IndiaToday/status/2103073733451866175/video/1

   

அதிவேகமாக வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார் பலத்த சேதமடைந்ததுடன், காரில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.