ஐயோ இப்படி பண்ணிடாலே..! நடனம் ஆட தடை… பெற்றோரின் கண்டிப்பால் 10-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

By Gayathri on புரட்டாதி 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடனம் ஆடுவதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உயிருக்கு போராடிய அந்த மாணவியை மீட்டு, ஹிட்னல் மற்றும் கொப்பல் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாகக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ‘இயற்கைக்கு முரணான மரணம்’ என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்கள் மகளின் மரணத்தில் வேறு நபர்கள் மீதும் தங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.