ஐயோ காப்பாத்துங்க… மரண பயம் காட்டிய ஓடும் ரயில்… கிண்டி ஸ்டேஷனில் முதியவரை நடுநடுங்க வைத்த நொடி… துடிதுடித்து ஓடிவந்து காப்பாற்றிய RPF காவலர்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

கிண்டி ரயில் நிலையத்தில், வியாழக்கிழமை மாலை ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் வழுக்கிச் சிக்கிய 69 வயது முதியவரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் சுதாரிப்பாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார். விழுப்புரம்-சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் நடைமேடை 1-ல் நின்று மாலை சுமார் 5.30 மணியளவில் புறப்படத் தொடங்கியபோது இந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முகமது எலியாஸ் என்ற அந்தப் பயணி, நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி ரயில் மற்றும் நடைமேடைக்கு இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் விழுந்தார். இதை உடனடியாகக் கவனித்த அங்கே பணியில் இருந்த RPF காவலர், சற்றும் தாமதிக்காமல் நொடிப் பொழுதில் அவரைப் பற்றி இழுத்து நடைமேடைக்குக் கொண்டு வந்தார்.

   

காவலரின் இந்த விரைவான மற்றும் சாதுர்யமான நடவடிக்கையால் முதியவர் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து விரைந்து செயல்பட்ட RPF காவலருக்குப் பொதுமக்கள் மற்றும் சக பயணிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஓடும் ரயிலில் ஏற முயல்வது ஆபத்தானது என்றும் பயணிகள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.