ஐயோ என்னை விட்டுடுங்கடா… கையெடுத்துக் கும்பிட்டும் கேட்காத கும்பல்… கதறிய பெண்… நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்… பீகாரை உலுக்கிய அடுத்தடுத்த பகீர் சம்பவங்கள்…!!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

பீகாரின் ஜாமுய் சம்பவத்தைத் தொடர்ந்து, சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஜகத்சிங்பூர் அணைக்கட்டு அருகே இளம் பெண் ஒருவர் இளைஞர்கள் கும்பலால் வீதியில் வைத்து துன்புறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆண் நண்பருடன் புகைப்படம் எடுக்கச் சென்ற அந்தப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் கையெடுத்துக் கும்பிட்டும் இளைஞர்கள் சிலர் அவரது கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது.

சமூக வலைதளக் கண்காணிப்பின் போது இந்த வீடியோ வைரலாவதை அறிந்த சமஸ்திபூர் எஸ்.பி. அரவிந்த் பிரதாப் சிங், தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் சம்பவம் நடந்த இடம் கர்ப்பூரி கிராமக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதைக் கண்டறிந்தார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மைனர் சிறுமி என்பதால், காவல்துறை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா , போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தகவல் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளையும் காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2103038783142629816/video/1

   

பாதிக்கப்பட்டவர் மைனர் சிறுமி என்பதால், அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு வீடியோ அல்லது படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று சமஸ்திபூர் காவல்துறை ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்தகைய தகவல்களைப் பகிர்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 19 அன்று ஜாமுய் பகுதியில் பத்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தின் வடு மாறுவதற்குள், அதே போன்ற மற்றொரு சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.