அவனுக்கு ஒரு நல்ல அறை விடுங்க… 15 வயது சிறுவன் கார் மோதி பயங்கர விபத்து… நான்தான் ஓட்ட சொன்னேன்… தாயின் அதிர்ச்சி பதிலால் கொந்தளித்த நெட்டிசென்கள்… நொய்டாவில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 22, 2026

Spread the love

நொய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாக கார் ஓட்டி வந்து, ஒரு குழந்தையின் தாய் பயணித்த மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளான். இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், சிறுவனின் ஆபத்தான வாகனம் ஓட்டும் முறை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்குப் பிறகு கோபமடைந்த அந்த தாய், சிறுவனைக் கண்டித்து சண்டையிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவ இடத்திற்கு சிறுவனின் தாய் வந்தபோது, நிலைமை மேலும் தீவிரமடைந்தது. தன் 15 வயது மகன் உரிமம் இல்லாமல் கார் ஓட்டத் தான் அனுமதித்ததாக அச்சிறுவனின் தாய் ஒப்புக்கொண்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண், சிறுவனின் தாயாரின் பொறுப்பற்ற தனத்தைக் கடுமையாகச் சாடி, “அவனுக்கு ஒரு நல்ல அறை கொடுத்து புத்தி புகட்டுங்கள்” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

   

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மைனர் சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிப்பது பிற உயிர்களுக்கு ஆபத்தானது என்றும், அந்த சிறுவனின் பெற்றோர் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.