கோயில் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரமேஷ், கோயில் சார்பாக நடத்தப்படும் கல்லூரிகளில் பணியாளர்களின் பிள்ளைகளுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, அவர்களின் கல்விக் கட்டணத்தில் 50% சலுகையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், கோயில் பணியாளர்களுக்கான ஈட்டிய விடுப்பை 240 நாள்களாக உயர்த்தி, அதற்கான உரிய பணப் பலன்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
