சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 15) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் கட்டாயம் மூடப்படும் என்றும், அன்று மதுக்கடைகள் இயங்காது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தடையை மீறி கடைகளைத் திறப்பவர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படும் நிலையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அந்த முக்கிய நாட்களில் ஒன்றாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
