Categories: சினிமா

‘ரசிகரை அடித்தது தவறுதான். படத்தோட சீன்னு நெனச்சேன்’… பகிரங்க மன்னிப்பு கேட்ட ரஜினி பட வில்லன் நடிகர்… நல்ல விடுறீங்க சார் ரீலு…

Spread the love

‘காலா’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் நானா பட்டேக்கர். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர், என பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ஏற்கனவே தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் கோபக்கார இயக்குனராக நடித்திருப்பார். இப்படி பொம்மலாட்டம் படத்தில் சைலட்டாக நுழைந்து, வெயிட்டான வில்லன் என்று ‘காலா’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நானா பட்டேக்கர்.

இவரின் முழுப்பெயர் விஷ்வநாத் பட்டேக்கர். மகாராஷ்டிராவில் பிறந்த இவர் மும்பையில் இருக்கும் சர்.ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்லைட் ஆட்ஸ் கல்லூரியில் படித்தார். இவருடைய முதல் திரைப்படம் ‘கமான்’. பாலிவுட் திரைப்படமான இது 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவருக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது ‘பரிந்தா’ என்கிற திரைப்படம் தான்.

 

இவர் பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இன்றி பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மராத்தி மொழியில் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கிரந்த்வீர்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக 1995 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1990 ஆம் ஆண்டு நடித்த ‘பரிந்தா’ மற்றும் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அக்னி சாக்ஷி’ ஆகிய படங்கள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதோடு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்பொழுதும் இவர் பல்வேறு மொழித்திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பீ எடுத்துக் கொள்ள முயன்ற போது அவரை தலையிலேயே ஓங்கி அடித்து தள்ளி விட்டார்.  அவர் செய்த இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.  இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது இவர்  பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘படத்தின் ஒரு காட்சிக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம் அப்போது ஒரு நபர் உள்ளே வந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியாது. நடிகர் என நினைத்து சீனில் இருந்தபடி அடித்து விட்டு அவரை புறப்பட சொன்னேன்.

ஆனால் பின்னரே அவர் எங்கள் குழுவை சேர்ந்தவர் இல்லை என தெரிந்தது. உடனே அவரை அழைக்க நினைத்தேன் .ஆனால் அவர் அதற்குள் சென்று விட்டார். அவரின் நண்பர் யாரோ தான் வீடியோ எடுத்திருக்கக்கூடும். மற்றபடி என்னோடு புகைப்படம் எடுக்க வந்த யாரையும் நான் எதுவும் சொல்லவில்லை. நான் இச்செயலை  செய்யவில்லை. இச்சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது. ஏதேனும் தவறாக புரிந்து இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் இப்படி செய்ய மாட்டேன்’ என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளா.ர் ஒரு சிலர் இதனை ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு புறமோ ‘அடிக்கிறத அடிச்சிட்டு அது படத்தோட சீனா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago