Connect with us

6 டாப் ஹீரோக்களுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஹிட் படங்கள்… இதுல ரஜினிகாந்த் படம் தான் Highlight…

CINEMA

6 டாப் ஹீரோக்களுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஹிட் படங்கள்… இதுல ரஜினிகாந்த் படம் தான் Highlight…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்தியாவின் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர். எந்த கதாபாத்திரம் என்றாலும் சரி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்பவர் சிவாஜி கணேசன். 1950 60 70களில் முன்னணி நடிகராக வலம் வந்த சிவாஜி கணேசன் எண்பதுகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் வந்ததுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அப்படி சிவாஜி கணேசன் எம்ஜிஆருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களாக வந்த முன்னணி டாப் ஆறு நடிகர்களுடன் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த ஹிட் படங்கள் என்னென்ன என்பதை இனி காண்போம்.

   

1. ஒன்ஸ்மோர்
ஒன்ஸ்மோர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன், சரோஜாதேவி ஆகியோர் நடித்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருப்பார். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

   

 

2. தேவர் மகன்
1992 ஆம் ஆண்டு கமலஹாசன் உடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் தேவர் மகன். இத்திரைப்படத்தை பரதன் இயக்கியிருப்பார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

3. படையப்பா
1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடித்த திரைப்படம் படையப்பா. இத்திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருப்பார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருப்பார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வணிகரீதியாகவும் வசூல் சாதனை படைத்தது.

4. வீரபாண்டியன்
1987 ஆம் ஆண்டு விஜயகாந்த் சிவாஜி கணேசன் ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் வீரபாண்டியன். இத்திரைப்படத்தை கார்த்திக் ரகுநாத் இயக்கியிருப்பார். இசை சங்கர் கணேஷ். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

5. பசும்பொன்
1995 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் தனது மகனான பிரபுவுடன் இணைந்து நடித்த திரைப்படம் பசும்பொன். இத்திரைப்படத்தில் ராதிகா யுவராணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருப்பார். இந்த திரைப்படமும் ஹிட் ஆனது.

6. ஜல்லிக்கட்டு
1987 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் சத்யராஜ் ராதா அகியோர் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்த திரைப்படம் ஜல்லிக்கட்டு. இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருப்பார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

More in CINEMA

To Top