CINEMA
என் மனைவி சந்தோஷத்தை விட இது பெருசு.. நான் “கற்றது தமிழ்” படம் எடுக்கலைன்னா மாரி செல்வராஜ்.. கருணாஸ் ஓபன் டாக்..!!
பிரபல நடிகரான கருணாஸ் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான நந்தா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் அழிவதில்லை, ஏப்ரல் மாதத்தில், பேசாத கண்ணும் பேசுமே, புதிய கீதை, இயற்கை, பிதாமகன், திருடா திருடி, தேவதையை கண்டேன் கற்றது தமிழ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் கடந்த 2009ஆம் ஆண்டு ரிலீசான ராஜாதி ராஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறினார். அதன் பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி, காசேதான் கடவுளடா ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் ஜீவா, அஞ்சலி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.கருணாஸ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, எனக்கு என் மனைவி பிள்ளைகளோட சந்தோஷத்தை விட சினிமா புடிச்சிருக்கு. கற்றது தமிழ் அப்படிங்கற ஒரு படத்தை நான் எடுத்து தமிழ் நாட்டில் ரிலீஸ் பண்ணலேன்னா ராம் அப்படிங்கற டைரக்டர் யாருக்கு தெரிந்திருக்கும்? அஞ்சலின்னு ஒரு ஹீரோயின் இருப்பது யாருக்கு தெரிந்திருக்கும்?
இல்லன்னா அவர்கிட்ட அசிஸ்டென்டா வேலை பார்த்த மாரி செல்வராஜை யாருக்கு தெரிந்திருக்கும்? சினிமா என்பது அப்படித்தானே. நான் இங்க வந்து நானா ஜெயிக்கவில்லை. சென்னையில் வந்து வேற யாராவது டீ வாங்கி கொடுத்து, தம் அடிச்சு, அப்படித்தானே ஆளாகி இருக்கோம். நாளைக்கு நம்ம ஒரு கலைஞன் அப்படிங்கிற பெயர் மட்டும் தான் நிலைத்து நிற்கும் என கூறியுள்ளார்.