Connect with us

படத்துல மட்டும் தான் ஹோம்லியா?.. நிஜத்தில் இம்புட்டு கவர்ச்சியா?.. ரசிகர்களை திக்கு முக்காட வைத்த விக்ரம் வேதா நடிகை..!

CINEMA

படத்துல மட்டும் தான் ஹோம்லியா?.. நிஜத்தில் இம்புட்டு கவர்ச்சியா?.. ரசிகர்களை திக்கு முக்காட வைத்த விக்ரம் வேதா நடிகை..!

பெங்களூரை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் , லீகல் சம்பந்தமான படிப்பை படித்து முடித்த பிறகு நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.

   

தற்போது 33 வயதாகும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

   

 

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான யு டர்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கவனிக்கப்பட்ட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மாறினார்.

இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சில விருதுகளையும் அவர் பெற்றார்.

அதன் பிறகு தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

பிறகு இவன் தந்திரம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவரை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தான்.

இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். தற்போது கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவருக்கு தமிழில் தற்போது கலியுகம் என்ற திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது. அதனைப் போலவே கடந்த ஆண்டு வெளியான இருகபற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய ஓய்வு நாட்களை கழிக்க தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ளார்.

அங்கு கண்ணை கவரும் இயற்கை எழிலுக்கு நடுவே மலைகள் சூழ்ந்த இடத்தில் படகு ஒன்றில் கவர்ச்சியான உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top