CINEMA
யோகாவில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்.. நீங்க நினைக்கிற மாதிரி உடல் நலத்துக்கு இல்லப்பா.. வீடியோவை பாருங்க..!!
பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ்க்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தனது வழக்கமான நடவடிக்கைகளை சோசியல் மீடியாவில் பதிவிடுவார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் இது உடல் நலத்திற்காக இல்லை. Vivo T3 Pro என்ற செல்போன் ப்ரொமோஷனுக்காக யோகா செய்யும் வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த செல்போனில் இருக்கும் அம்சங்களை கேப்ஷனில் பதிவு செய்துள்ளார். மேலும் செப்டம்பர் 3 முதல் இந்த செல்போனின் சேல்ஸ் ஆரம்பிப்பதாகவும் கேப்ஷனில் கூறியிருக்கிறார்.
View this post on Instagram