hampi

13 ஆம் நூற்றாண்டில் உருவான விஜயநகர பேரரசின் தலைநகரம்… ஹம்பி உருவான வரலாறு…

By admin on ஐப்பசி 28, 2024

Spread the love

மத்திய கர்நாடகா மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹம்பியில் பல நினைவு சின்னங்கள் இருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

விஜயநகர பேரரசின் தலைநகராக 1336 முதல் 1565 வரை ஹாம்பி இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு இது கைவிடப்பட்டிருக்கிறது. ஹாம்பி துங்கபத்ரா ஆற்றின் அருகே ஏராளமான கோயில்கள் பண்ணைகள் மற்றும் வர்த்தக சந்தைகளுடன் ஒரு செழிப்பான மற்றும் பணக்கார நகரமாக இருந்திருக்கிறது. கிபி 1500க்கு பிறகு ஹம்பிதான் பெய்ஜிங்குக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்திருக்கிறது.

   

இந்தியாவின் பணக்கார நகரங்களான பெர்சியா மற்றும் போச்சுகளில் இருந்து வணிகர்கள் ஹம்பிக்கு வந்து வணிகம் செய்திருக்கின்றனர். 1565 க்கு பிறகு சுல்தானிய படைகளால் இந்த ஹம்பி கையகப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டது மற்றும் பாதிக்கு மேல் அழிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஹாம்பி இடிந்த நிலையில் இருந்தது.

 

யுனெஸ்கோவால் உலகின் பிரமாண்டமான தளம் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது ஹம்பி. இந்த ஹம்பி கோட்டைகள் ஆற்றங்கரை அம்சங்கள் அரசு வளாகங்கள் கோயில் போன்ற புனித வளாகங்கள் கோவில்கள் தூண் மண்டபங்கள் நினைவு கட்டமைப்புகள் நீர் கட்டமைப்புகள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் கடைசி பெரிய இந்து ராஜ்யத்தின் தலைநகராக இருந்திருக்கிறது.

இந்து கடவுள்களின் கோவில்கள் இந்த ஹம்பில் அதிகமாக இருக்கிறது. இந்த தளத்தில் இருக்கும் நினைவுச் சின்னங்கள் முன்னதாக வண்ணங்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வரலாற்று ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் விஜயநகர காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இத்தலம் முக்கியத்துவம் அறிந்ததாக கருதப்பட்டு இருக்கிறது. இந்திய தொல்லியல் துறை தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.