sleep

இரவில் நன்றாக ஆழ்ந்து தூங்க முடியவில்லையா…? இந்த உணவுகளை சாப்பிடுங்க…

By Meena on அக்டோபர் 28, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கை பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் அவசரமாக வேகமாக நாட்களும் ஒவ்வொருவரும் தினமும் செல்கிறது. ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்துடன் அன்றாடம் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சரி படிப்பவர்களும் சரி யாராக இருந்தாலும் ஒருவருக்கு அன்றைய தினம் நன்றாக செல்ல வேண்டும் என்றால் நல்ல தூக்கம் அவசியம். நன்றாக தூங்கி எழுந்தால் தான் அன்றைய தினம் நமக்கு நல்லபடியாக செல்லும். சிலருக்கு தூக்கம் வருவதில்லை. சிலர் ஆழ்ந்த தூக்கமே இல்லை என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சில உணவுகளை சாப்பிடும் போது அது உங்களுக்கு நல்ல ஒரு தூக்கத்தை தரும். அவை என்ன என்பதை இனி காண்போம்.

   

நிம்மதியான தூக்கத்துக்கு மெலடோனின் என்ற ஹார்மோன் சீராக சுரக்க வேண்டியது அவசியம். அது சரியாக சுரக்கவில்லை என்றால் நல்ல தூக்கம் வராது. அதன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். முதலில் நல்ல தூக்கத்திற்கு பால் அருந்தலாம். தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலை குடிக்கும் போது உங்களுக்கு அமைதியான நல்ல தூக்கம் கிடைக்கும்.

   

மீன்கள் நல்ல உறக்கத்துக்கு அதிகம் உதவுபவை. இதில் உள்ள வைட்டமின் டி ஒமேகா 3 அமிலம் நல்ல கொழுப்பு சத்து ஆகியவை தூக்கத்தை தூண்டும். அதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த ஒமேகா-3 சத்துள்ள மீன்களை வாங்கி சாப்பிடுங்கள். அடுத்ததாக கீரைகள். கீரையில் இரும்பு சத்து வைட்டமின்கள் தாது பொருட்கள் ஆகியவை இருக்கிறது. கீரைகளில் அதிகமாக நமது உணவை சேர்த்துக் கொள்ளும் போது அது நல்ல தூக்கத்தை வரச் செய்யும். இரவில் கீரையை சாப்பிடாதவர்கள் மதிய உணவில் கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.

 

அடுத்ததாக பழங்கள் ஆப்பிள் அவகேடோ வாழைப்பழம் கிவி பழம் போன்றவை உங்களுக்கு நல்ல உறக்கத்தை தரக்கூடிய பழங்கள் ஆகும். தூங்குவதற்கு முன்பு இந்த பழங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடும் போது இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அடுத்ததாக பேரிச்சம்பழம் பாதாம் வால்நட் வேற்கடலை போன்ற நட்ஸகளை சாப்பிடலாம். இந்த நட்ஸ்களில் இருக்கும் வைட்டமின்கள் தாது சத்து ஒமேகா-3 அமிலம் நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும். ஒரு நாளைக்கு 20 கி விகிதத்தில் இந்த நட்ஸ்களை சாப்பிடும்போது உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

உணவுகளைத் தவிர சில வாழ்க்கை முறை பழக்கங்களையும் நாம் மாற்றி கொண்டால் நல்ல தூக்கம் வரும். அதாவது தினமும் ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மொபைல் ஃபோனை தூர வைத்து விடுங்கள். மொபைல் ஃபோனை பார்த்துக் கொண்டே இருந்தாலும் தூக்கம் வராது. மது புகை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்பு தலையணைக்கு பக்கத்திற்கு ஃபோன் வைக்காமல் தூரமாக வைத்து விட்டு தூங்குங்கள். இதுபோல செய்யும்போது உங்களால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.