banu

MGR க்கு ஜோசியம் பார்த்த பிரபல நடிகை… அவரை பற்றி முன்னமே கணித்தது இதுதான்….

By admin on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தை அமைத்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் படிப்படியாக உயர்ந்து சினிமாவில் நடிகர் ஆனார். தானக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது படங்களில் சமூகநீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் க்ஷன் காட்சிகள் அதிகமான இருக்கும். இதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

MGR படங்கள் என்றாலே ஹிட்டுதான் என்ற அளவுக்கு பேரும் புகழும் பெற்றார். இதனால் இவருடன் இணைந்து படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளும் போட்டி போட்டு வருவர். தான்னை ஆதரித்து அழகு பார்த்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR நடிக்கும்போதே திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

 

பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR. தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தார் MGR. ஆனால் அவராது எதிர்காலம் ப்படி தான் இருக்கும் என்று ஒரு பிரபல நடிகை ஜோசியம் பார்த்து கூறியிருக்கிறார். அது என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

MGR உடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்தான் பிரபல நடிகை பானுமதி. இவர் ஜோசியம் தெரிந்தவராகவும் கை ஜோசியம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டு படித்திருந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் ஷூட்டிங்கில் எம்ஜிஆர் இருக்கும்போது அவரிடம் போய் பானுமதி உங்கள் கையை கொடுங்கள் நான் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்த்து கூறுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் MGR க்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் அவர் கூறுகிறாரே என்று கையை காண்பித்திருக்கிறார். அப்போது அதை பார்த்து பானுமதி ஒரே வார்த்தையில் நீங்கள் பேரும் புகழும் அடையப்போகிறீர்கள் ஆனால் அது சினிமாவில் அல்ல என்று கூறியிருக்கிறார். அப்போது அதை நம்பாமல் இருந்த எம்ஜிஆர் பின்னாளில் அவர் அரசியலில் பெயரோடும் புகழும் இருக்கும்போது பானுமதி ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது நீங்கள் சொன்னபடியே நடந்து விட்டது என்று கூறி ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.