ஜெய்சங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகராவார். கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஜெய்சங்கர். இவரது இயற்பெயர் சங்கர் என்பதாகும். இவர் முதல் திரைப்பட இயக்குனர் இவரது பெயருடன் ஜெய் என்பதை இணைத்து ஜெய்சங்கர் என்று வைத்தார். இவரது தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியில் படித்த காலத்திலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த ஜெய்சங்கர் அவரது தந்தையின் அறிவுறுத்தல்படி சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஜெய்சங்கர் சட்டம் படிப்பதில் நாட்டம் இல்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதை கைவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஜெய்சங்கர் சோ ராமசாமியின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடக குழுவில் முதலில் சேர்ந்து பணியாற்றினார்.
பின்னர் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெய்சங்கர். இதை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் ஜெய்சங்கர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் அந்த காலத்தில் புகழின் உச்சியில் இருந்தாலும் ஜெய்சங்கரின் தனித்துவமான நடிப்பிற்காகவே ரசிகர்கள் பலர் இருந்தனர்.
ஏனென்றால் ஜெய்சங்கர் வழக்கமான சண்டைக்கு மாறாக கோட்டு சூட்டு துப்பாக்கி என வில்லத்தனத்தை வித்தியாசமாக காண்பித்தார். இதனால் இவரை தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைத்தனர். அது மட்டுமில்லாமல் இவரது படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமை வெளியாகும் அதனால் வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் இவரை மக்கள் அழைத்தனர். இப்படிப்பட்ட ஜெய்சங்கருக்கு ஒரு நல்ல குணம் இருந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
ஜெய்சங்கர் எம் ஜி ஆர் கணேசன் ஜெமினி கணேசன் ஆகியோருக்கு இணையாக அந்த காலத்தில் தனது வில்லத்தனத்திற்கும் நடிப்பிற்காகவும் போற்றப்பட்டவர். ஆனாலும் இவரது படங்கள் ஹிட் ஆனாலும் கூட இவருக்கு எந்த நல்ல குணம் என்னவென்றால் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு படம் ஹிட் ஆகும் அளவுக்கு நடிப்பாராம். அது மட்டுமல்லாமல் யாரேனும் சம்பள பாக்கி வைத்தால் கூட அதை திருப்பி கேட்க மாட்டாராம் ஜெய்சங்கர். அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவராக இருந்திருக்கிறார்.