“ராஜா வேஷம் களைந்து போச்சு டும் டும் டும்”… விஜய்யை பங்கமாக கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு…!

By Divyamayakannan on ஆவணி 26, 2025

Spread the love

தமிழ்நாடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றன. இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் துதித்த பல்வேறு புதிய புதிய திட்டங்களால் நிரம்பி உள்ள ஆட்சியாக இந்து ஆட்சி திகழ்கிறது. அதனால் தான் நாலா பக்கமும் ஈட்டி முனை தாக்குதல் ஏற்படுகிறது. எவ்வளவுதான் ஈட்டியை தீட்டி எறிந்தாலும் எங்கள் பக்கம் உள்ள இறைவன் எங்களுக்கு துணையாக இருப்பதால் நாங்கள் நடுநிலையான நியாயத்தை எடுத்துக் கூறி வெல்வோம்.

புதிதாக அரசியலுக்கு வந்த தவெக தலைவர் விஜய் அவர் நடத்திய இரண்டாவது மாநாட்டிலே அவருடைய புட்டு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது நரியின் சாயம் வெளுத்துப் போச்சு ராஜவேஷம் கலைஞ்சு போச்சு என்பது போல விமர்சனங்களை தாங்கி சென்றுக் கொண்டிருக்கிறார் விஜய். இரண்டு மாநாட்டிலேயே பல சம்பவங்கள் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாநாடுகள் நடத்தினால் பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் போல.

   

முதல்வரின் கொடி இமயத்தின் உச்சியில் உள்ளது. இன்றுவரை பள்ளி செல்வங்களுக்கு சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் கூறியுள்ளார். சிறுபிள்ளைத்தனமாக பேசும் நபர்களுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை, வரட்டும் களத்தில் சந்திப்போம் என்றார்.