“ஜனநாயகன்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் முக்கிய பிரபலம்… யார் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!!

By Soundarya on ஆவணி 26, 2025

Spread the love

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இந்த படம் விஜயின் கடைசி படம். கேவிஎம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபிதியோல் உள்ளிட்ட பலரும் நடிப்புள்ளார்கள். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல TVK கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் , அட்லி ஆகியோரும் இந்த படத்தில் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு நட்சத்திரமும் கேமியோவாக களமிறங்கியுள்ளார். அவர் யார் என்றால் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் . இவர் இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்