Categories: Web Stories

ஒரே வீட்டில் கொலை செய்யப்பட்ட ஆறு நபர்கள்! கொலையாளி யார் என்று குழம்பிப்போன போலீஸார்! உலகையே உலுக்கிய இடியாப்பச் சிக்கல் கேஸ்…

உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது. அது கொலை சம்பவங்களாகவும் இருக்கலாம். அவ்வாறு கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் யார் கொலையாளி என்று தீர்வு காணவே முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கிகொண்ட ஒரு கொலை வழக்கு குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1922 மார்ச் 31 ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா என்ற சிறிய ஊரில் ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் கூர்மையான ஆயுதம் கொண்டு தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துபோய் கிடந்தார்கள். அந்த 6 பேரில் 2 வயது குழந்தையும் அடக்கம். மேலும் ஒரு 7 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டிருந்தாள்.

அந்த வீட்டிற்கு ஹிண்ட்டர்ஹைஃபக் ஃபார்ம்ஸ்டெட் என்று பெயர். அண்டிரியாஸ் என்ற 60 வயது முதியவரின் வீடு அது. அந்த வீட்டில் அவர் தனது மனைவி கசிலியாவுடன் வாழ்ந்து வந்தார். மேலும் அந்த வீட்டில் ஆண்டிரியாஸின் மகளான விக்டோரியா தனது இரண்டு குழந்தைகளுடனும் வசித்து வந்தார்.

விக்டோரியாவின் கணவரான கார்ல் முதலாம் உலகப்போரில் இறந்துப்போனவர். விக்டோரியாவிற்கு கசிலியா என்ற 7 வயது பெண் குழந்தையும், ஜோசஃப் என்ற இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்த ஐவருடன் மரியா என்ற வேலைக்காரப் பெண்ணும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

கொலை நடந்து 5 நாட்கள் கழித்து, அதாவது ஏப்ரல் 4 ஆம் தேதி அந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த லாரன்ஸ் என்பவர், “கடந்த 4 நாட்களாக இந்த வீட்டில் இருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லையே. ஆள் நடமாட்டமே இல்லாதது போல் இருக்கிறதே” என்று சந்தேகப்பட்டு தனது இரண்டு மகன்களை அந்த வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார்.

அந்த இரண்டு மகன்களும் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு திரும்பிவிடுகின்றனர். “அந்த வீடு வெளியே பூட்டிக்கிடக்கிறது” என்று கூறுகின்றனர். அதன் பின் லாரன்ஸ் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த 6 பேர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். அதன் பின் விஷயம் போலீஸுக்கு சொல்லப்படுகிறது.

போலீஸாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் தெரிய வருகின்றன. அதாவது ஆண்டிரியாஸின் மகளான விக்டோரியாவிற்கு ஜோஸ்ஃப் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருக்கிறதல்லாவா? அந்த ஆண் குழந்தைக்கு அப்பாவே ஆண்டிரியாஸ்தான் என்று அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடம் கூறுகின்றனர். அதாவது அப்பா ஆண்டிரியாஸ் தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததில் பிறந்த குழந்தைதான் ஜோசஃப் என்று போலீஸாரிடம் கூறுகின்றனர்.

இந்த விஷயம் உண்மையாக இருந்தால் ஒரு வேளை விக்டோரியாவின் கணவரான கார்ல் கூட இந்த 6 பேரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் முதல் உலகப்போரில் இறந்துப்போனதாக கூறப்பட்டாலும் அவரது சடலம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர் உயிரோடு எங்கேயோ மறைந்திருந்து வாழ்ந்துகொண்டு அதன் பின் இவர்கள் 6 பேரை கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

அது போக அந்த வீட்டிற்கு அருகில் இருந்த லாரன்ஸ் மீதும் ஒரு தீவிரமான சந்தேகம் வந்தது. அதாவது லாரன்ஸின் மகன்கள் போலீஸாரிடம் விசாரணையில் “எனது தந்தை அந்த வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போனார். ஆனால் உள்ளே சென்று சாவியை வைத்து கதவை பூட்டிக்கொண்டார். பல மணி நேரம் கழித்துதான் வெளியே வந்தார்” என்று கூறியிருக்கின்றனர்.

அதாவது அந்த கொலை நடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அந்த வீட்டின் சாவி தொலைந்துப்போய்விட்டதாக ஒரு புகார் வந்திருக்கிறது. அப்படி இருக்க லாரன்ஸுக்கு எப்படி சாவி கிடைத்தது? என்ற சந்தேகம் வந்தது. அது போக ஆண்டிரியாஸின் மகளான விக்டோரியாவிற்கும் லாரன்ஸுக்கும் ஒரு தகாத உறவு இருந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியிருக்கின்றனர். அந்த இருவருக்கும் பிறந்த குழந்தைதான் ஜோசஃப் என்று ஒரு பேச்சும் உண்டு.

ஆதலால் லாரன்ஸின் மீது சந்தேகம் அதிகளவானது. ஆனால் அவரை விசாரித்துப்பார்த்ததில் அவர் கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அது போக அந்த வீட்டில் கொலையுண்டு கிடந்த வேலைக்காரப்பெண்ணான மரியா அந்த கொலை நடந்த அன்று காலையில்தான் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.

அதற்கு முன்பு 6 மாதங்களாக வேறொரு பணிப்பெண் அந்த வீட்டில் வேலை செய்திருக்கிறார். அந்த சமயத்தில் அந்த வீட்டில் பல அமானுஷ்ய சப்தங்கள் கேட்டதாகவும் அந்த வீடு பேய் வீடு என்பதாலும்தான் அந்த வீட்டில் இருந்து வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார். அது போக அந்த கொலை நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விக்டோரியாவின் தாய் பேய் பிடித்தது போல் நடந்துகொண்டதாக விக்டோரியாவின் மகளான 7 வயது சிறுமி தனது பள்ளி மாணவிகளிடம் கூறியிருக்கிறார். இது போலீஸாருக்கு பெரும் குழப்பத்தை உண்டு செய்தது.

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 6 பேர்கள் மீது அதிகபடியான சந்தேகம் கிளம்பியது. அந்த ஆறு பேரும் இந்த குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள். ஆனால் அந்த 6 பேரில் ஒருவர் கூட இந்த கொலையை செய்ததாக ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி 70 வருடங்களாக முடிக்கப்படாத இந்த கொலை வழக்கை 2007 ஆம் ஆண்டு போலீஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் கையில் எடுத்தனர்.

அவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்த கொலைக்கான குற்றவாளியை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த கொலையாளி உயிரோடு இல்லை என்று தெரிய வந்தது. அந்த கொலையாளியின் பெயரை வெளியே சொன்னால் அந்த கொலையாளியின் உறவினர்களுக்குத் தேவையில்லாத மனக்கசப்பு ஆகிவிடும் என்று கூறி அந்த கொலையாளியின் பெயரை கடைசி வரை வெளியவே விடவில்லை.

 

Arun

Recent Posts

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

31 mins ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

3 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago