Categories: சினிமா

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

1970 ஆம் ஆண்டு வெளிவந்த வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் ஜென்டில்மேன், பூவே உனக்காக, ஜோடி, ஸ்நேகிதி, பூவெல்லாம் உன் வாசம், பிரெண்ட்ஸ், டும் டும் டும் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் சிறந்த நடிகையாக வலம் வந்தார்.

2001 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் மெட்டி ஒலி, அண்ணாமலை, வாணி ராணி, பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட ஹிட் சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார். 1979 ஆம் ஆண்டு பிரபல மலையாள ஒளிப்பதிவாளராக இருந்த வில்லியம்சை திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவரது கணவர் மறைவுக்குப் பிறகு நான்கு பிள்ளைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார் சாந்தி வில்லியம்ஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் மாரடைப்பால் பிறந்த போது அவர் மர்மமான முறையில் தான் இறந்து விட்டார் என்று கூறி வந்ததற்கு சாந்தி வில்லியம்ஸ் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “தனது கணவர் வில்லியம்ஸ் பெரிய கேமரா மேன். மோகன்லாலின் இரண்டாவது படமான ஹெலோ மெட்ராஸ் கேர்ள்ஸ் படத்தை தயாரித்து இயக்கியதும் என் கணவர் தான். அந்த படத்தில் மோகன்லால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். அந்த சமயத்தில் தனது வீட்டிற்கு மோகன்லால் நேரடியாக கேரியர் கொண்டு வந்து மீன் சமைக்க சொல்லி எடுத்துச் செல்வார்.

மோகன்லால் வைத்து எனது கணவர் நான்கு படங்களை தயாரித்திருக்கிறார் ஆனால் அவர் இறந்தபோது கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. உலகிற்கே பிடித்த மோகன்லால் எனக்கு சுத்தமாக பிடிக்காது.  நான் நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தபோது கூட மோகன்லாலுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் என் நகைகளை விற்றுக்கொடுத்தேன். என்னை எங்கேயாவது பார்த்தால் கூட தலைதரிக்க ஓடிவிடுவார். அவனுக்கு என்கிட்ட மரியாதையே கிடையாது” என்று சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago