#image_title
தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற இரு கலைகளை விட நாடகக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. நாடகத்தின் அடுத்த பரிணாமமாக வந்த சினிமாவுக்கு அதைவிட அதிக முக்கியத்துவம் கிடைத்தது.
சினிமா அறிமுகமான காலத்திலேயே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் திரையரங்குகள் கட்டப்பட்டன. அதுமட்டுமில்லாமல் கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இப்போது 900 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருக்கும் நிலையில் சில திரையரங்குகள்தான் மக்களின் மனங்களில் இருந்து நீங்கா புகழ் பெற்றவையாக இருக்கின்றன.
அப்படி ஒரு திரையரங்கம்தான் மதுரையில் 1952 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தங்கம் திரையரங்கம். இந்த தியேட்டர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையை அப்போது பெற்றது. இதில் 2563 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். ஒரு படம் இந்த தியேட்டரில் ஹவுஸ் புல் ஆகிறது என்றால் அந்த படம் ஹிட் என்று அறிவிக்கும் அளவுக்கு இந்த தியேட்டர் விளங்கியுள்ளது.
தியேட்டர் கட்டிமுடிக்கப்பட்டு ரிலீஸ் ஆன முதல் படம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி திரைப்படம். அப்பொது தியேட்டரின் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருந்ததால் மணல் மீது உட்கார்ந்து அந்த படத்தை மக்கள் 100 நாட்களுக்கும் மேல் பார்த்துள்ளனர். நாடோடி மன்னன், தூறல் நின்னு போச்சு போன்ற படங்கள் இங்கு 100 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன.
ஒரு கட்டத்தில் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் இந்தி, ஹாலிவுட், புருஸ் லீ என படங்களை ரிலீஸ் செய்து அந்த படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த அளவுக்கு மக்கள் இந்த தியேட்டரையும் சினிமாவையும் கொண்டாடியுள்ளனர். ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் சீக்கிரமே முடிந்துவிடும் என்பதைப் போல 1995 ஆம் ஆண்டு இந்த தியேட்டரும் மூடுவிழா கண்டது.
அதன் பின்னர் சில ஆண்டுகளில் இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட்டது. மதுரை காக்கா தோப்பு பகுதியில் சென்னை சில்க்ஸ் வளாகம் இருக்கும் இடம்தான் தங்கம் தியேட்டர் இருந்த இடம். தியேட்டரின் நினைவாக இப்போது தங்கம் நகைக் கடை ஒன்றும் அங்குள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…