அலெர் மக்களே..! ஆரஞ்சு அலெர்ட் எதிரொலி: 19 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

By Soundarya on தை 10, 2026

Spread the love

தமிழகத்தில் நிலவும் ஆரஞ்சு அலர்ட் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும்; தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்; மற்றும் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற தென் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  மேலும், மின்கம்பங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.