BREAKING: தமிழக அரசியலில் உதயமானது புதிய கட்சி… பாமகவுக்கு அடுத்த சிக்கல்..!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, ‘ஜெ.குரு பட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கட்சியின் கொடியையும் அவர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகத் திகழ்ந்த தனது தந்தையின் பெயரிலேயே புதிய இயக்கத்தை அவர் ஆரம்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாமக தலைமைக்கும் காடுவெட்டி குருவின் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இந்தச் சூழலில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட மோதலால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் விருதாம்பிகை இக்கட்சியைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்துத் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கட்சி தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.