குடிமகன்களுக்கு பேரிடி..! அடுத்தடுத்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் – அதிரடி உத்தரவு..!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

தமிழகத்தில் வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26 (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1 (வள்ளலார் நினைவு தினம்) ஆகிய மூன்று முக்கிய தினங்களை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (Bars) மற்றும் கிளப்புகளில் மது விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டு, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் இந்த உத்தரவை மீறி யாராவது மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த குறிப்பிட்ட தினங்களில் கடைகளை மூடி வைக்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.