மக்களே உஷார்… தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை… காலையிலேயே வந்த அலர்ட்…!!

Spread the love

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24ஆம் தேதி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மேலும் வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கனைத்துள்ளது.

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“கொத்து பரோட்டா போட்டிருப்பாங்க”…. விஜய்யின் கோட்டையிலேயே புகுந்து அடித்த சத்யராஜ்… 2026-ன் முதல் அரசியல் மோதல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது…

1 minute ago

அது என் சம்பந்தி பேக்டரி… என் சகலையோட மில்… குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டாதீங்க… செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி காரசார பதிலடி..!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

3 minutes ago

“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…

6 minutes ago

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

10 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

10 minutes ago

ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

10 minutes ago