BREAKING: இனிமேல்தான் கனமழை வெளுத்து வாங்கும்…. தமிழகத்திற்கு ஹை அலெர்ட் ….!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல், சென்னைக்கு 50 கி.மீ. தொலைவிலேயே நிலைகொண்டுள்ளது. சென்னைக்கு அருகே நகராமல் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே திருவள்ளூரில் இன்று அதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.