“நீங்களே போய்ட்டீங்க, நான் எதுக்கு உயிரோட இருக்கணும்”… 2 பிஞ்சு குழந்தைகளை பரிதவிக்க விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோக சம்பவம்…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு தாலுகா பகுதியில் உள்ள சாய்ராம் லேஅவுட் பகுதியை சேர்ந்த சௌபாக்கியா (31) என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சௌபாக்கியாவின் கணவர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சௌபாக்கியா கணவர் இல்லாமல் தினம் தோறும் நாளை கழிப்பதற்கு தினமும் சிரமப்பட்டுள்ளார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். சிறு சிறு வேலைகளை செய்து தன்னுடைய குழந்தைகளை அவர் கவனித்து வந்தார்.

இருந்தாலும் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அவர் நேற்று தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சௌபாக்கியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் பரிதவிக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.