தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அக்டோபர் 22 நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
