BREAKING: தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… முதல் மாவட்டமாக அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் முதல் மாவட்டமாக கடலூரில் நாளை அக்டோபர் 22 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அடுத்தடுத்த மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.