BREAKING: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்…!

By Nanthini on ஆவணி 31, 2025

Spread the love

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலையில் 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது.