பொதுவாகவே கீரைகளில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. கீரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமான சுவையும் தனித்துவமான மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது. அதில் மிக முக்கியமானது புளிச்ச கீரை. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. புளிச்ச கீரையை அடிக்கடி நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
புளிச்ச கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், புளிச்சக்கீரையில் வைட்டமின் பி வைட்டமின் கே வைட்டமின் 2 வைட்டமின் பி9 வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து சோடியம் கார்போஹைட்ரேட்டுகள் புரோட்டீன் சத்துக்கள் உள்ளன.
கண் பார்வையை புளிச்ச கீரை மேம்படுத்துகிறது. ஏனெனில் இந்த கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. புளிச்ச கீரை எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் புளிச்சக்கீரையில் வைட்டமின்கள் கனிமச்சத்துக்கள் புரோட்டீன்கள் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இதில் கலோரிகள் குறைவாகவும் கொழுப்புகள் சுத்தமாகவும் இல்லை.
மேலும் புளிச்ச கீரை உடல் வீக்கத்தை குறைக்கிறது. மன அழுத்தம் காரணமாக பலருக்கும் உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதால் புளிச்ச கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். புளிச்ச கீரை எலும்புகளை வலுவாக்கும். தூக்கமின்மை பிரச்சனையை போக்கும். ரத்த சோகையை சரியாக்கும். செரிமான ஆரோக்கியத்திற்கும் புளிச்ச கீரை மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சரும பிரச்சனைகள் குறிப்பாக சொறி சிரங்கு போன்ற சரும பிரச்சனைகள் இருந்தால் புளிச்ச கீரை சட்னி, துவையல் செய்து சாப்பிடுங்கள். விரைவில் குணமாகும். புளிச்ச கீரை குளிர்ச்சியை தரும். எனவே உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் உடலை குளிர்ச்சியாக வைக்க புளிச்சக்கீரை சாப்பிடலாம். மேலும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு புளிச்சக்கீரை மிகவும் நல்லது. ஆண்மை குறைபாட்டை இது போக்குகிறது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…