குழந்தைக்காக தனது மனைவியை கூலிப்படை வைத்து கடத்திய கணவன்… பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை!

Spread the love

கன்னடத்தில் டிவி சீரியல்களில் பிரபல நடிகையாக இருப்பவர் சைத்ரா. அவரது கணவர் ஹர்ஷவர்தன். அவர் தயாரிப்பாளராக உள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் ஹர்ஷவர்தனுக்கும் சைத்ராவுக்கும் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சைத்ரா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சைத்ராவை அவரது கணவர் ஹர்ஷவர்தன் காரில் கடத்திச் சென்றுள்ளார். மைசூருக்கு படப்பிடிப்புக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைத்ரா சென்ற நிலையில், அவரை ஹர்ஷவர்தன் கூலிப்படை வைத்து காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. சைத்ரா கடத்தப்பட்ட நிலையில் பல மணி நேரத்துக்கு பிறகு சைத்ரா எப்படியோ அவரது நண்பருக்கு போன் செய்து இதை தெரிவித்துள்ளார்.

அந்த நண்பர், சைத்ராவின் குடும்பத்தினருக்கு இந்த தகவலை உடனே சொல்லி இருக்கிறார். இதையடுத்து சைத்ராவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் சைத்ராவின் அம்மாவுக்கு போன் செய்த ஹர்ஷவர்தன், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தால் தான், சைத்ராவை விடுவிப்பேன் என்று மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.குழந்தைக்காக கணவரே தனது மனைவியை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Elango

Recent Posts

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

24 seconds ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

5 minutes ago

“நெருங்காதே”.. முதலிரவில் கட்டாயப்படுத்திய கணவன்… மணமகள் கொடுத்த ‘பளார்’ அடி.. இருவீட்டார் மோதலில் மணமகனுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி..!!

திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…

10 minutes ago

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

11 minutes ago

“நெஞ்சே நடுங்கிடுச்சு.. ஒன்றல்ல, இரண்டல்ல.. அடுத்தடுத்து வந்த நாகப்பாம்பு.. தெறித்து ஓடிய விவசாயி.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…

20 minutes ago

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…

24 minutes ago