குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவில் எள் முக்கியமானதாக உள்ளது. எள் உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மைகளைத் தருகிறது. உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி உடலுக்கு ஆற்றலை எள் வழங்குகிறது. பலவிதமான நோய்களை எள் தடுக்கிறது. உடலை வலுப்படுத்தவும் எள் உதவுகிறது.
குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு எள் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. குளிர்காலத்தில் எள் உடலை சூடாக வைத்திருக்கிறது. ஆகையால் குளிர்காலத்தில் அவற்றை உட்கொள்வது உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. சளி தொந்தரவை நீக்குகிறது. சோர்வு மற்றும் பலவீனத்தை குறைக்கிறது. இது வாதம் கபம் இரண்டையும் சீர் செய்கிறது. எள் விதைகளில் குறிப்பிடத்தக்க ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. அவை உடலில் ப்ரீ ரேடிக்கலால் ஏற்படும் சேதத்தை தடுக்கின்றன.
பெண்களுக்கு எள் சருமப்பொலிவை அதிகரிக்கிறது. எள்ளில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை கெட்டக் கொழுப்பை குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. எள் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. எள் விதைகள் ஆற்றலின் நல்ல மூலமாகவும் விளங்குகின்றன. கால்சியம் இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் எள்ளில் இருப்பதால் உடலுக்கு வலிமையை அளிக்கின்றன. பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எள் விதைகள் வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகின்றன. இரத்த சோகையையும் தடுக்கிறது.
