வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு விருப்பமான 5 மலர்களை படைத்து வழிபடுவதால் வாழ்க்கையில் செல்வம் சேர்ந்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் செல்வம் செழிக்க சுபிட்சம் பெருக மகாலட்சுமிக்கு விருப்பமான 5 மலர்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.
மல்லிகை
மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த மலர்கள் மிகவும் பிடிக்கும். அதனால் மல்லிகை மகாலட்சுமிக்கு பிடித்த மலராக இருக்கிறது. வெள்ளை நிறம் அமைதி மற்றும் ஒற்றுமையை குறிக்கக்கூடிய நிறம் என்பதால் மல்லிகை பூவை மகாலட்சுமிக்கு அணிவிப்பதால் அவர் மனம் மகிழ்ந்து குடும்ப ஒற்றுமை அன்பு பலம் ஆகியவை நிலைத்திருக்க அருள் செய்வார்.
தாமரை
தாமரை மலர் மகாலட்சுமிக்கு விருப்பமானது. ஒரே ஒரு தாமரை மலர் படைத்து வழிபட்டாலும் அந்த வழிபாட்டையும் வேண்டுதலையும் மகாலட்சுமி ஏற்றுக்கொள்வார். அதிலும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு தாமரை மலர் படைத்து வழிபட்டால் செல்வவளம் அமைதி நிம்மதி பலம் ஆகியவற்றை அருள்வார்.
சாமந்திப்பூ
இதுவும் மகாலட்சுமிக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாக இருக்கிறது. சாமந்திப் பூவின் மங்களகரமான நிறம் மணம் ஆகியவை மகாலட்சுமிக்கு விருப்பமானது. இந்த பூவை மகாலட்சுமிக்கு படைத்து வழிபடுவதால் அதிர்ஷ்டம், அதிக அளவிலான நன்மைகள் வந்து சேரும்.
செம்பருத்தி
சிவப்பு நிற செம்பருத்தி மலரை மகாலட்சுமிக்கு படைப்பது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது பலம் ஆற்றல் ஆகியவற்றின் அடையாளமாக ஆன்மீகத்தில் கருதப்படுவதால் அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்ற மலராக செம்பருத்தி உள்ளது. செல்வவளம் பலம் அழகு பெருக்கம் ஆகியவற்றைத் தரும்.
ரோஜா
சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்களை மகாலட்சுமிக்கு படைத்து வழிபடுவதால் அவரது மனம் மகிழும். வீட்டில் அமைதியும் தூய்மையும் நிலவும். பொருளாதார நிலை, வேலைகளில் இருக்கும் தடைகள் அகலும். குறிப்பாக பெண்களுக்கு திருமண தடைகள் அகலும்.
