மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் வயது 12. இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். பழைய ஆயக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு வரை படித்துவிட்டு இந்த ஆண்டுதான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த மாணவன் பள்ளிச்சீருடை அணிந்து வராமல் கலர் பேண்ட் போட்டு வந்துள்ளால் . தலைமை ஆசிரியர் ஏன் சீருடை அணிந்து வரவில்லை என்று சத்தம் போட்டு உள்ளார். பின்பு அச்சிறுவனின் கையைப் பிடித்து திருகி அடித்ததாகவும். அதனால் கை தசை கிழிந்து கட்டு போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் மீது மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாணவன் மற்றும் மாணவனின் தந்தையும் புகார் அளித்துள்ளனர். அச்சம்பவத்தை குறித்து தந்தை கூறியது; எனது மகன் பள்ளி சீருடை வாங்கும் போதே பேண்ட் அளவு சரியில்லாமல் கொடுத்திருந்தனர். அதை கேட்டபோது பேண்ட் வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். அதனால் எனது நண்பர் மூலமாக கிடைத்த சீருடை பேண்டை அணிந்து கொண்டிருந்தான். சம்பவத்தன்று என் மகன் கலர் பேண்ட் அணிந்துப் பள்ளிக்கு சென்றிருந்தான். அதற்காக தலைமை ஆசிரியர் திட்டிக் கையை திருகி அடித்ததனால் என் மகனுக்கு காயம் ஏற்பட்டு கட்டுப் போட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…