உத்தரப் பிரதேச மாநிலம் சப்ராவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்த கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெட்டி ஒன்றுக்குள் தலை இல்லாத இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் வழக்கமாக நடைபெறும் சோதனையின்போது, படுக்கை வசதி கொண்ட பெட்டியில் (Sleeper Coach) சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இரும்புப் பெட்டி மற்றும் பையை ரயில்வே ஊழியர்கள் கவனித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (RPF) தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த இரும்புப் பெட்டியை உடைத்து சோதனை செய்தபோது, அதற்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் தனித்தனியாக பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு, அருகிலிருந்த மற்றொரு பையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொல்லப்பட்ட பெண்ணிற்கு சுமார் 25 முதல் 30 வயது இருக்கும் எனப் போலீசார் கணித்துள்ளனர். சடலத்தின் தலை இன்னும் கிடைக்காததால், அந்தப் பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், கொலையாளிகளைக் கண்டறியவும் பெண்ணின் அடையாளத்தைக் கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…