துபாய் – டெல் அவிவ் இடையிலான ‘ப்ளைதுபாய்’ விமானத்தில் அரங்கேறிய நடுவானில் கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி, இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட், கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தை தரையில் மோதி வெடிக்கச் செய்ய முயன்றார். கொடூரமான தாக்குதலுக்குப் பிறகும், பலத்த காயமடைந்த ஸ்மித் மச்சார் மன உறுதி தளராமல் காக்பிட் கதவைத் திறந்து பயணிகளுக்கு வழிவகுத்தார். பயணிகளின் உதவியுடன் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டு, விமானத்தில் பயணித்த வேறு இரண்டு பைலட்கள் மூலம் விமானம் சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
கத்தியால் குத்தப்பட்டதில் கேப்டன் ஸ்மித் மச்சாரின் தலை மற்றும் கைகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த விமானத்தில் பயணித்த ஒரே மருத்துவரான பல் மருத்துவர் முசயேவ் சோட்டா உடனடியாகச் செயல்பட்டு, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். உயிருக்குப் போராடிய நிலையிலும் 39 வயதான ஸ்மித் மச்சார், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி, தொடர்ந்து பிரார்த்தனை செய்தவாறே இருந்தார். மருத்துவர் அளித்த சரியான நேரத்து முதலுதவியால், சவுதியில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக உள்ளார்.
மும்பை கிழக்கு காட்கோபரைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், தற்போது பணி நிமித்தமாக துபாயில் வசித்து வருகிறார். விமானப் போக்குவரத்துத் துறையில் 9,750 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், முன்பு ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு சீனியர் கமாண்டராகவும், மற்ற பைலட்களுக்குப் பயிற்சி அளிக்கும் லைன் டிரெய்னிங் கேப்டனாகவும் முத்திரை பதித்தார். அதன்பின்னரே, 2022-ஆம் ஆண்டு முதல் ‘ப்ளைதுபாய்’ நிறுவனத்தில் நேரடியாக கேப்டனாகப் பணியில் இணைந்துச் சேவையாற்றி வருகிறார்.
கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பமே விமானப் போக்குவரத்துத் துறையில் தடம் பதித்து வருகிறது. இவரது சகோதரரும் ஒரு பைலட்டாக ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடுமையான ஆபத்து மற்றும் கொடூரத் தாக்குதலுக்கு இடையிலும், தன் உயிரைப் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் வீரமும் துணிச்சலும் உலகளவில் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது.
பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் ஞான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை…
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…
பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…
LPU ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள 'O' மொபைல் கடையில் சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள…
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா…