வேற லெவல்…! 14 ஜோடிகள்… ரூ.5 லட்சம் சீர்வரிசை… குடும்பங்களுக்குக் கிடைச்ச புது வாழ்க்கை… வாயடைச்சு நின்ன அசல் ட்விஸ்ட்…!!

Spread the love

திருச்செந்தூர் அருகே தாமிரபரணி நதி கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில், ஏழ்மை நிலையில் உள்ள 14 ஜோடிகளுக்கு ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இலவசமாகத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ‘புன்னக்காயல் ஊர் நலக் கமிட்டி’ என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் வறுமை நிலையில் உள்ள 14 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, இரு வீட்டார் சம்மதத்துடன் புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை முன்னிலையில் அவர்களுக்கு ஒரே மேடையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

புதிய வாழ்க்கையைத் தொடங்கும் இந்தத் தம்பதிகளுக்குச் சிறப்பான முறையில் சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மணமகளுக்கும் தலா ஒரு சவரன் தங்கத் தாலி வழங்கப்பட்டதோடு, கட்டில், பீரோ, தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி உள்ளிட்ட 36 வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் சீதனமாக அளிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு ஜோடிக்கு சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருக்கும். தங்களது கிராமத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் நோக்கில், கடந்த 200 ஆண்டுகளாகவே இந்தச் சமூகத் திருமண முறை ஒரு பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருவதாக ஊர் நலக் கமிட்டியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு திருமணத்தை நடத்துவதே பல குடும்பங்களுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக இருக்கும் நிலையில், 14 குடும்பங்களின் திருமணச் செலவுகளை ஒட்டுமொத்த கிராமமே இணைந்து ஏற்றிருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சீர்வரிசைப் பொருட்களை மட்டும் வழங்கிவிட்டு விலகாமல், ‘உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நாங்களும் உங்களுக்குத் துணையாக இருக்கிறோம்’ என்ற மாபெரும் நம்பிக்கையை ஊர் மக்கள் அந்தத் தம்பதிகளுக்கு விதைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்திய இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமைக்கும் மனிதநேயத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Gayathri

Recent Posts

மக்களே உஷார்!… குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஆக்ரோஷ யானை… நடைப்பயிற்சி சென்ற முதியவர் பலி… பதபதைக்கும் தருணம்…!!

மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…

6 minutes ago

“டேய்… என்னை விட்டுரு….” பிணமாக கிடந்த 70 வயது மூதாட்டி…. சொந்த பேரனே செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில், பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாகச் சொந்தப்…

9 minutes ago

பள்ளி அருகே பயங்கரம்… அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்… நூலிழையில் தப்பிய மாணவர்கள்… வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!

பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…

15 minutes ago

“உடலில் துர்நாற்றம் வீசுகிறது…” கர்ப்பிணி பெண்ணுக்கு ஹாஸ்பிடலில் அனுமதி மறுப்பு… நடுரோட்டிலேயே பிரசவம்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் ஞான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை…

16 minutes ago

பட்டப்பகலில் அரங்கேறிய  கொடுமை…! ஓடும் ரயிலில் கைவரிசை காட்டிய வாலிபர்…. மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம்… வைரலாகும் வீடியோ…!!

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…

31 minutes ago

“கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை…” முதியவரை அடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கும்பல்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…

44 minutes ago