“என்னால முடியல அதன் கொன்னுட்டேன்” தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே தகராறு…. கட்டையால் ஒரே போடு போட்டு மகனை கொன்ற தாய்… சேலத்தில் பரபரப்பு…!!

By Divyamayakannan on ஆவணி 18, 2025

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் காவடிக்காரனூர் பாலிபெருமாள் கோவில்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவர் ஒரு விவசாயி. மனைவி காளியம்மாள் (70).  இவர்களுக்கு சாந்தி என்ற மகளும் முத்துசாமி (49) என்ற மகனும் உள்ளனர். சாந்திக்கு திருமணம் ஆகிவிட்டது , அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கணவனுடன் வாழ்ந்து வருகிறார். மகன் முத்துசாமிக்கும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

முத்துசாமிக்கும் சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்து 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர். பின்பு முத்துசாமி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த கோமதி என்ற கோவிந்தம்மாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 3 வயதில் ஒரு மகள் உள்ளனர். முத்துசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் தாக்கி வந்துள்ளார். அதனால் தந்தை பழனியப்பன் மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

   

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கோவிந்தம்மாள் முத்துசாமிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அதனால் கோவிந்தம்மாள் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்பு காளியம்மாள் மகன் முத்திசாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த காளியம்மாளை முத்துசாமி குடித்துவிட்டு வந்து அடித்துள்ளான். இதனால் கோபம் அடைந்த தாய் கட்டையை எடுத்து அவன் தலையிலே அடித்துள்ளார். முத்துசாமி துடிதுடித்து இறந்து போனான்.

   

இத்தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து காளியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன குடிபோதையில் பணம் கேட்டு தினந்தோறும் தாயை சித்திரவதை செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.