மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும்… வெளியான புதிய தகவல்..!!

By Divyamayakannan on ஆவணி 18, 2025

Spread the love

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 கொடுக்கப்பட்டு வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள் . இந்த முகாம்களில் விடுபட்ட மற்றும் தகுதி உள்ள அனைத்து மகளிர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பல லட்சம் பெண்கள் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி கவனத்திற்கு போனதால் . ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் முகாம்கள் நடத்திவருகிறது.  அதில்  விண்ணப்பித்து  நிராகரிக்கப்பட்ட  அனைவருக்கும் மற்றும் விண்ணப்பிக்க தவறிய பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

   

குறிப்பாக முதியோர் ஓய்வு ஊதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வருமானச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் இருந்தால் இந்த முகாம்களில் கலந்து கொண்டு சரி செய்து கொள்ளலாம். முகாம்கள் நடைபெறும் தேதி மற்றும் இடங்களை பற்றி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசு வெளியிட்டு உள்ளது.