“அடேங்கப்பா.. இவ்வளவு பெரிய அந்தர் பல்டியா?… இயேசுவாகக் காட்டிவிட்டு இப்போது ‘டாக்டர்’… டிரம்பின் விளக்கம் தான் இப்போது செம வைரல்”….!!!

Spread the love

ஈரான் மீதான போரை நிறுத்துமாறு வலியுறுத்திய போப் ஆண்டவர் லியோவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். போப் ஆண்டவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, தனது ஆன்மீகப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தினார். இந்த மோதல் கத்தோலிக்க சமூகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு சர்வதேச அளவில் பேசுபொருளானது.

இதற்கிடையில், டிரம்ப் தன்னை இயேசுவைப் போல சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்தப் படத்தில் இயேசுவின் தோற்றத்தில் இருந்த டிரம்ப், அற்புதங்களைச் செய்வது போலவும், அவருக்குப் பின்னால் அமெரிக்கக் கொடி மற்றும் ராணுவ விமானங்கள் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. தன்னைத் தெய்வமாக உருவகப்படுத்திய டிரம்பின் இந்தச் செயலுக்கு அமெரிக்க கத்தோலிக்கத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்தப் புகைப்படத்தை டிரம்ப் தனது பக்கத்திலிருந்து நீக்கினார். இது குறித்து விளக்கம் அளித்த அவர், அந்தப் படம் தன்னை இயேசுவாகக் காட்டவில்லை என்றும், ஒரு மருத்துவராகவே தன்னைக் கருதி அதைப் பகிர்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், அந்தப் படம் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அதன் பணியாளர்களுடன் தொடர்புடையது என்றும், மக்கள் அதற்குத் தவறான அர்த்தம் கற்பித்துவிட்டதாகவும் கூறி தனது செயலை நியாயப்படுத்தினார்.

Muthu Mani

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

2 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

2 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

2 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

3 மணத்தியாலங்கள் ago