விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் தற்போது பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்க்காத அல்லது கேள்வி படாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது. ‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’ என்ற ஸ்லோகனுடன் தொடங்கி சிறியவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர், பெரியோர்களுக்கு சூப்பர் சிங்கர் சீனியர் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் செந்தில் குமார் ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களின் மனதை கொள்ளையடித்தனர். அவர்கள் பாடும் நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்சமயம் ராஜலட்சுமி பாடிய புஷ்பா பட பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அந்த அளவிற்கு இது மக்கள் மத்தியில் பிரபலமானது.
தற்பொழுது தங்கள் குழந்தைகளின் காதணி விழாவை அவர்கள் மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர் . அது மட்டும் இல்லாமல் இவர்கள் ஒரு புதிய வீட்டையும் ரசித்து ரசித்து பெரிய அரண்மனையை போன்று கட்டியுள்ளார்கள்.
இந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு தாங்கள் சூப்பர் சிங்கரில் நுழைய காரணமாக இருந்த ‘இயக்குனர் ரூபா’ அவர்களை அழைத்து குத்து விளக்கு ஏற்றி வீட்டின் திறப்பு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி உள்ளனர். அவர்களது பிரமாண்ட வீட்டின் வீடியோ இதோ உங்களுக்காக….
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து,…
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…