‘சூப்பர் சிங்கர்’ செந்தில் ராஜலட்சுமி கட்டியுள்ள சொகுசு பங்களாவை பார்த்திருக்கீங்களா…. என்னம்மா சூப்பரா கட்டி இருக்காங்க… வைரலாகும் வீடியோ இதோ…

By Begam on புரட்டாதி 30, 2022

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர்.  இவர்கள் தற்போது பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்க்காத அல்லது கேள்வி படாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது. ‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’ என்ற ஸ்லோகனுடன் தொடங்கி சிறியவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர், பெரியோர்களுக்கு சூப்பர் சிங்கர் சீனியர் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

   

   

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் செந்தில் குமார் ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களின் மனதை கொள்ளையடித்தனர். அவர்கள் பாடும் நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்சமயம் ராஜலட்சுமி பாடிய புஷ்பா பட பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அந்த அளவிற்கு இது மக்கள் மத்தியில் பிரபலமானது.

 

தற்பொழுது தங்கள் குழந்தைகளின் காதணி விழாவை அவர்கள் மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர் . அது மட்டும் இல்லாமல் இவர்கள் ஒரு புதிய வீட்டையும் ரசித்து ரசித்து பெரிய அரண்மனையை போன்று கட்டியுள்ளார்கள்.

இந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு தாங்கள் சூப்பர் சிங்கரில் நுழைய காரணமாக இருந்த ‘இயக்குனர் ரூபா’ அவர்களை அழைத்து குத்து விளக்கு ஏற்றி வீட்டின் திறப்பு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி உள்ளனர். அவர்களது பிரமாண்ட வீட்டின் வீடியோ இதோ உங்களுக்காக….

https://www.youtube.com/watch?v=In9DrnN_dKg&t=10s