அரசு பேருந்தை வழிமறித்து தனுஷ் ரசிகர்கள் செய்த அட்டகாசம்…. நீங்க கொண்டாடுவதற்கு வேறு இடமே இல்லையாப்பா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ….

By Begam on புரட்டாதி 29, 2022

Spread the love

இன்று தியேட்டரில் வெளியான நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கச் சென்ற  தனுஷின் ரசிகர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கலைப் புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. ‘ மயக்கம் என்ன’ படத்தை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணி இணையும் படம் ‘நானே வருவேன்’.  இந்த படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

   

   

தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனும்  நடித்துள்ளார். தற்பொழுது இந்த படம் இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்டபடைப்பான  பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் ஷோ காலை எட்டு மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் முன் அலைமோதியது. தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் கட் அவுட்டிற்கு பால அபிஷேகம் செய்து பிரம்மாண்டமாகக் கொண்டாடினார்கள்.

 

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் நடு ரோட்டில் வந்த அரசு பேருந்தை  மறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டு தீ என பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெடிசன்கள் சிலர் ‘உங்களுக்கு கொண்டாடறதுக்கு வேற இடமே  இல்லையாப்பா..’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.