என்னது.. சாய் பல்லவி ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்துல நடிச்சிருக்காங்களா..? இந்த சீன் நோட் பண்ணீங்களா..?

By Begam

Published on:

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. இன்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள்.

   

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர்கள் 2008-ல் தாம் தூம் என்ற படத்தில் நடிகை கங்கனா ரணாவத் அவர்களுக்கு தோழியாக நடித்து இருந்தார்.

அதோடு இந்த படத்தில் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார் என்று பலரும் சொல்லி இருந்தார்கள். ஆனால், உண்மையாகவே நடிகை சாய் பல்லவி அவர்கள் 2005 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரி மான் என்ற படத்தில் நடிகை ஜாஸ்மீனுக்கு தோழியாக நடித்து உள்ளார். தற்பொழுது நடிகை சாய் பல்லவி தாம் தூம் திரைப்படத்தில் நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது