Connect with us

மறைந்த இயக்குனரும், நண்பருமான KV. ஆனந்த் வீட்டிற்கு தனது அப்பா சிவகுமாருடன் திடீர் விசிட் அடித்த நடிகர் சூர்யா… ஓ இதுதான் விஷயமா…?

CINEMA

மறைந்த இயக்குனரும், நண்பருமான KV. ஆனந்த் வீட்டிற்கு தனது அப்பா சிவகுமாருடன் திடீர் விசிட் அடித்த நடிகர் சூர்யா… ஓ இதுதான் விஷயமா…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்பொழுது ‘கங்குவா’ திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது  43வது படத்திலும் நடிக்க உள்ளார்.

   

இந்நிலையில் மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யாவும் அவரது அப்பா சிவகுமாரும் நேரில் சந்தித்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1994ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பத் என்ற திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் கேவி ஆனந்த்.  தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார்.

   

 

இதைத்தொடர்ந்து தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், கில்லி, சிவாஜி போன்ற படங்களுக்கும் சினிமோட்டோகிராபி செய்துள்ளார். அதன்பின்னர் கனா கண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் என பல சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கினார்.  நடிகர் சூர்யாவின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் அயன். 2009ல் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும்மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் மாற்றான், காப்பான் படங்கள் ரிலீஸானது. முதல் படத்திலிருந்தே சூர்யா – கேவி ஆனந்த் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்நிலையில் கடந்த 2021ல் கொரோனா பாதிப்பால் கேவி ஆனந்த் உயிரிழந்தார். இந்நிலையில் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யாவும் சிவகுமாரும் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.  கேவி ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதற்கு வாழ்த்து கூறவே நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் கே வி ஆனந்த் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More in CINEMA

To Top