முழு நேர பிசினஸ் Woman-ஆக மாறிய ஹரியின் மனைவி பிரீத்தா.. கல்லா கட்ட தொடங்கிய புது பிசினஸ்..!!

By admin on சித்திரை 6, 2024

Spread the love

இயக்குனர் ஹரி தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் இயக்கிய சாமி படம் சூப்பர் ஹிட் ஆனது.

   

இதனையடுத்து கோவில், ஐயா, தாமிரபரணி, சிங்கம், வேங்கை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. பல கமர்சியல் படங்களை இயக்கும் ஹரி கடந்த ஒரு ஆண்டாக டப்பிங் ஸ்டுடியோ பிசினஸிலும் ஈடுபடுகிறார். அதனை முழு நேரமாக ப்ரீத்தா தான் கவனித்து கொள்கிறார்.

   

 

கடந்த ஒரு வருடமாக அதனை ப்ரீத்தா கவனமாக நிர்வகித்து வருகிறார். ஏற்கனவே இரண்டு ஸ்டூடியோக்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது ப்ரீத்தா மூன்றாவதாக ஒரு ஸ்டூடியோவை திறந்துள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஸ்டூடியோ திறப்பு விழாவிற்கு ஸ்ரீதேவி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.