என் நேரம் நல்லா இருக்கு ; எனக்கு சரியா அமைந்தது….. அதிதி ராவ் குறித்து முதல்முறையாக மனம் திறந்த சித்தார்த்

By Deepika on சித்திரை 6, 2024

Spread the love

பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். தொடர்ந்து சில படங்கள் நடித்த சித்தார்த்துக்கு வரவேற்பு கிடைக்காததால் அவர் அப்படியே தெலுங்கி சினிமா பக்கம் போனார். அங்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் சித்தா படம் மூலம் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.

Aditi rao and siddharth

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து உருவான இந்த படம் சித்தார்த்துக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே வேளையில் வாழ்க்கையிலும் சித்தார்த்துக்கு பல நல்ல திருப்பங்கள் இந்த வருடம் நடந்துள்ளது. காற்று வெளியிட படம் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவை காதலித்து வந்த சித்தார்த், சமீபத்தில் அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

   
   

Siddharth and aditi rao

 

அதிதி ராவின் பூர்வீகமான தெலங்காவில் உள்ள வனர்பதி என்ற இடத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அங்கு அதிதியின் தாத்தா கட்டிய கோவிலில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இரு குடும்பங்கள், இவர்களின் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தநிலையில் சமீபத்தில் விருது விழாவில் கலந்துகொண்ட சித்தார்த் முதன்முறையாக அதிதி பற்றி மனம் திறந்துள்ளார்.

siddharth about his engagement

அவர் கூறியதாவது, எனக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என நினைக்கின்றேன், அதான் நல்லதாகவே நடக்கிறது. 21 வருடங்களாக எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும் என சொல்லி கொண்டிருந்தேன், இப்போது தான் கிடைத்தது. அதுவும் சரியாக அமைந்துள்ளது, சந்தோஷமாக உள்ளது என பேசிக்கொண்டே தன நிச்சயதார்த்த மோதிரத்தையும் காண்பித்தார் சித்தார்த். 44 வயதாகும் சித்தார்த் ஏற்கனவே மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.